ஐ.நா மனித உரிமைகளுக்கான அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உய்குர் மற்றும் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியத்தில் பெரும்பான்மையான முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக கடுமையான மனித உரிமை மீறல்களை சீனா செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகளுக்கான அலுவலகத்தின் எதிர்பார்க்கப்பட்ட அறிக்கையில், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையின் தனிப்பட்ட சம்பவங்கள், தடுப்புக்காவல் நிலைமைகள், சித்திரவதைகள், தவறான சிகிச்சை முறைகள், கட்டாய மருத்துவ சிகிச்சை உட்பட பல குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.
உய்குர் சிறுபான்மையினரைக் குறிவைத்து தீவிரவாத எதிர்ப்பு மூலோபாயத்தை கையாள்வதாக சீன அரசு கூறியதன் பின்னணியில் இந்த மீறல்கள் நடந்துள்ளன.
தொழிற்கல்வி மற்றும் பயிற்சி மையங்கள் அல்லது மறு கல்வி முகாம்கள் என்று அவை அழைக்கப்படுகின்றக என்றும் உள்ளது.
அறிக்கையின் முடிவில், உய்குர் மற்றும் பிறருக்கு எதிரான தன்னிச்சையான தடுப்புக்காவல்களின் அளவு, தனிப்பட்ட மற்றும் கூட்டாக அனுபவிக்கும் அடிப்படை உரிமைகளின் கட்டுப்பாடுகள், இழப்புக்கள் ஆகியவை மனிதகுலத்திற்கு எதிரான சர்வதேச குற்றங்களாக இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து ஐநா மனித உரிமைகள் அலுவலகம் மற்றும் ஐநா மனித உரிமைகள் அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட உய்குர்கள் மற்றும் பிற பெரும்பான்மையான முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் பற்றிய கடுமையான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்த மதிப்பீடு தொடங்கப்பட்டது.
இந்த மதிப்பீடு, அலுவலகத்திற்குக் கிடைக்கும் ஆவணப் பொருட்களின் கடுமையான பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது, அதன் நம்பகத்தன்மை நிலையான மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது.
சீன அரசாங்கத்தின் சொந்த சட்டங்கள், கொள்கைகள், தரவுகள் மற்றும் அறிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு அனைத்து சட்டங்களும் கொள்கைகளும் சர்வதேச மனித உரிமைச் சட்டத்திற்கு இணங்குவதை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள எந்தவொரு நபரின் இருப்பிடத்தையும் குடும்பங்களுக்குத் தெரியப்படுத்தவும், சரியான இருப்பிடங்களை வழங்கவும், ‘பாதுகாப்பான தகவல்தொடர்பு சேனல்களை’ நிறுவவும் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கும் சீனா உதவ வேண்டும் என்று அறிக்கை கூறியுள்ளது.
இதற்கிடையில், சீன அரசாங்கம் குறித்த அறிக்கையை மறுத்துள்ளதோடு, ஷின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையில் செயல்படுகிறார்கள் என்றும், அங்கு கொள்கை பாகுபாடு உள்ளது என்ற விடயம் அடிப்படை ஆதாரமற்றது’ என்றும் கூறியுள்ளது.