அரசியல் தீர்வு என்பது ஒரு சமஸ்டி கட்டமைப்பிலான அர்த்தமுள்ள ஒரு அதிகார பகிர்வாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் காலதாமதப்படுத்துகின்றது என்பதை ஐ.நா.வில் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
ஒரு சமஸ்டி கட்டமைப்பிலான ஒரு அதிகார பகிர்வுவே தமிழ் மக்களுக்கு வேண்டும் என்றும் அதனையே ஏற்றுக் கொள்வோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை ஐ.நாவில் நிறைவேற்றப்பட போகும் தீர்மானங்கள் குறித்து இணை அணுசரணை நாடுகள் தீவிரமாக கலந்தாலோசித்து வருவதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.
இருப்பினும் குறித்த தீர்மானத்தை மேலும் பலபடுத்த வேண்டும் என தாம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.