யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கைத்தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.
கற்றன்நெசனல் வங்கியின் “உங்களுக்காகவே நாம் போஷாக்குத்திட்டத்தின்” மூலம் வவுனியாவில் கர்பிணி தாய்மார்களுக்கு சத்துணவு பொதிகள் நேற்று (புதன்கிழமை) வழங்கி வைக்கப்பட்டது.
வங்கியின் பிராந்திய பொறுப்பதிகாரி ந.கருணைராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன் கலந்து கொண்டார்.
நிகழ்வில் கர்பிணித்தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள் தொடர்பாக விழிப்புணர்வு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து தாய்மார்களிற்கான சத்துணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் பிரியதர்சினி சயீவன், வைத்தியர் ஜெயதரன், கற்றன் நெசனல் வங்கியின் கிளை முகாமையாளர் எஸ்.சுரேஸ்குமார், சுகாதார வைத்திய அதிகாரி யூட் பீரிஸ், கிராம சேவகர்கள் உட்பட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.