அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க ஆளும்கட்சியின் சில உறுப்பினர்கள் தயாராவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை வந்தவுடன் இந்த கோரிக்கையை உடனடியாக விடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாகக் இந்த கோரிக்கையை முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ரராச்சி ஆகியோர் ஜனாதிபதியிடம் விடுத்திருந்தனர்.
அத்துடன், மக்களின் நெல் கொள்வனவுக்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறை படுத்தவும் விமலவீர திஸாநாயக்க உட்பட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, காலவரையறையின்றி பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் வர்த்தக மாபியாவை முறியடிக்கவும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று தயாராகியுள்ளது.