முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட தற்போதைய ஆளுநர்களுக்குப் பதிலாக ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் அனுபவமுள்ளவர்களை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆளுநர்களாக நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் என்பது மாகாண சபைகள் மீது நிறைவேற்று அதிகாரங்களை செலுத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்படும் பதவியாகும். மாகாண சபையினால் நிறைவேற்றப்படும் எந்தவொரு சட்டமும் சம்பந்தப்பட்ட ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்னரே நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.