பிரச்சினைகளைக் கண்டு அஞ்சி ஒழிவது தங்களின் கொள்கை கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நிதியமைச்சர் என்ற வகையில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த பல யோசனைகளை ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார் என குறிப்பிட்டார்.
சர்வதேச ரீதியாக எழுந்துள்ள சவால்களை வெற்றிக்கொள்ள நாம் இடைக்கால மற்றும் நீண்ட கால பொருளாதாரக் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
குற்றங்களை மட்டும் சுமத்திக் கொண்டிருக்காமல் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுக்க வேண்டும் என்றும் அதுவே தமது நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டார்.
மேலும் எவ்வாறான சிக்கல்களை எதிர்க்கொண்டாலும் நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வது எமது கொள்கை கிடையாது என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.