Mandous சூறாவளியால் வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது காங்கேசன்துறை தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 65 முதல் 75 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மீன்பிடி செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.