காற்று மாசடைவு காரணமாக, சூழலுக்கும், பொதுமக்களின் வாழ்க்கைக்கும் மேலும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் எம்.டீ.எம். மஹீஸ் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
காற்று மாசடைவு காரணமாக, நகரப்புற மக்களின் வாழ்வியல் முறைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் முதல் முறையாக காற்று மாசடைவை அதிகளவில் அவதானிக்க முடிகின்றது.
இதன் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களின் அன்றாட செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.