மட்டக்களப்பு மண்மனை வடக்கு பிரதேச செயலக பிரிவு உட்பட்ட சவுக்கடி பகுதியில் சட்டவிரோதமாக அரச காணிகளை சில நபர்கள் கையகப்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் பிரதேச செயலகமும் முற்றுகையிடப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று பின்னர் அங்கிருந்து மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை கோசங்களை எழுப்பியவாறு சென்று காணி அபகரிப்பு தொடர்பாக பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதன் போது காணி அபகரிப்புக்கு எதிராக உரிய தீர்வினை தற்போதைய வழங்க வேண்டும் என கோரி பிரதேச செயலாளருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் குறித்த இடத்தில் இருந்து செயலகத்திற்குள் சென்றார் இந்த நிலையில் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கோஷங்களை எழுப்பியவாறு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் இவ்விடத்தை விட்டு செல்ல மாட்டோம் என பிரதேச செயலகம் முன்பாக இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதேச செயலாளர் மற்றும் மட்டக்களப்பு பொலிஸார் உடனடி பிரச்சனை தொடர்பாக மக்கள் உடன் கதைத்த போது மீண்டும் மக்கள் உரிய முறையில் தீர்வினை எடுக்காவிட்டால் இவ்விடத்தில் இருந்து செல்லமாட்டோம் என்றதனைத்தொடர்ந்து பிரதேச செயலாளர் மீண்டும் அலுவலகத்திற்குள் சென்றார்.
தொடர்ந்து மக்கள் உரிய தீர்வு வழங்க வேண்டும் என கூறி பிரதேச செயலகம் முன்பாக கோஷங்கள் எழுப்பியவாறு இருந்தனர் அதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதேச செயலாளர் உடன் ஒரு சிலர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடியனர்.
கலந்துரையாடலின் போது பிரதேச செயலாளர் குறித்த அரச காணிகளை அபகரிக்கின்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளதாகவும் அப்பகுதியில் மரங்களை வெட்டுகின்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது மட்டக்களப்பு பொலிஸார் அதற்கு உரிய நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுப்பார்கள் எனவும் வாக்குறுதி அளித்ததன் பிற்பாடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றனர்.