பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே இன்று பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஆவணி மாதம் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 89 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார்.
கடந்த கார்த்திகை மாதம் 21 ஆம் திகதியில் இருந்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர் தற்போது மேலதிக குற்றச்சாட்டுகளுக்காக மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வசந்த முதலிகே நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்திலிருந்து அவரை விடுதலை செய்யுமாறு கோரி அமைதி போராட்டமொன்று நடத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இடம்பெறும் மௌனப் போராட்டம் தொடர்வதைத் தடுக்கும் வகையில் வாழைத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்தை நாடினர்.
இருப்பினும் போராட்டம் உண்மையில் அசௌகரியத்தை ஏற்படுத்தினால் கைது செய்யுங்கள் என்றும் அதற்கு நீதிமன்ற உத்தரவு அவசியம் இல்லை என்றும் நீதிமன்றம் அறிவித்தது.