2023ஆம் ஆண்டில் பிரித்தானிய பொருளாதாரம் 0.6 சதவீத வீழ்ச்சியை சந்திக்கும் என சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) கணித்துள்ளது.
வாழ்க்கைச் செலவு குடும்பங்களைத் தாக்கி வருவதால், பிரித்தானியப் பொருளாதாரம் சுருங்கி மற்ற முன்னேறிய பொருளாதாரங்களைக் காட்டிலும் மோசமாகச் செயல்படும் என அது கூறியுள்ளது.
எவ்வாறாயினும், இலையுதிர்கால அறிக்கைக்குப் பிறகு பிரித்தானிய பொருளாதாரம் இப்போது சரியான பாதையில் இருப்பதாக நினைக்கிறது என்றும் ஐ.எம்.எஃப் கூறியது.
இதனிடையயே, திறைசேரியின் தலைவர் ஜெரமி ஹன்ட், கடந்த ஆண்டு பல முன்னறிவிப்புகளை பிரித்தானியா விஞ்சியது என கூறினார்.
அதன் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் புதுப்பிப்பில், பொருளாதார வளர்ச்சியை நிலைப்படுத்த வேலை செய்யும் ஐ.எம்.எஃப், பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்த ஆண்டு 0.3 சதவீத வளர்ச்சியைக் காட்டிலும் சுருங்கும் என்று கூறியது.
உலகின் முன்னேறிய மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில், ஒரு வருடத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவை சந்திக்கும் ஒரே நாடாக பிரித்தானியா இருக்கும் என்று அது கணித்துள்ளது.
ஐ.எம்.எஃப், தனது புதிய முன்னறிவிப்பு பிரித்தானியாவின் உயர் எரிசக்தி விலைகள் மற்றும் அதிக பணவீக்கம் போன்ற நிதி நிலைமைகளை பிரதிபலிக்கிறது என்று கூறியது.