கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) , கார்டன் மற்றும் டென்டன் (Gorton and Denton ) தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்லும் தனது விருப்பத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
உடல்நலக் குறைவால் (Andrew Gwynne) ஆண்ட்ரூ க்வின் விலகியதைத் தொடர்ந்து, இப்பதவிக்கு போட்டியிட தனது கட்சியின் தேசிய செயற்குழுவிடம் பர்ன்ஹாம் அனுமதி கோரியுள்ளார்.
அவர் வெற்றிபெற்றால் மேயர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால், இது கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கட்சியின் சில உயர்மட்ட தலைவர்கள் அவருக்கு ஆதரவு அளித்தாலும், லேபர் கட்சியின் தற்போதைய தலைமைக்கு அவர் ஒரு சவாலாக அமையலாம் என்ற கவலையும் நிலவுகிறது.
இந்நிலையில் மான்செஸ்டரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே தான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக விரும்புவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள இந்தத் தேர்வு செயல்முறை இங்கிலாந்துய் அரசியலில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.














