இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் தேசிய காவல் சேவையை (NPS) உருவாக்குவதன் மூலம் காவல்துறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் FBI போன்ற ஒரு அமைப்பாக செயல்படவுள்ள இது, பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் போன்ற மிகப்பெரிய சவால்களை கையாள்வதில் கவனம் செலுத்தும்.
இதேவேளை, இந்த புதிய அமைப்பானது நாடு முழுவதும் ஒரே மாதிரியான நவீன தொழில்நுட்பங்களையும் முக அங்கீகார கருவிகளையும் அறிமுகப்படுத்தி, தரமான பயிற்சியை உறுதி செய்யும்.
இதன் மூலம் உள்ளூர் காவல்துறையினர் தங்கள் பகுதிகளில் நடைபெறும் திருட்டு மற்றும் சமூக விரோதச் செயல்களைத் தடுப்பதில் அதிக நேரத்தைச் செலவிட முடியும்.
இந்த மாற்றங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, காவல்துறை மீதான நம்பிக்கையை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் மூலம் அதிகரிக்கவும் இலக்கு வைத்துள்ளன.
இந்நிலையில் இச்சீர்திருத்தங்கள் காவல்துறையின் செயல்பாட்டில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













