(Crowborough) குரோபரோவில் உள்ள முன்னாள் இராணுவ முகாமில் அகதிகள் தங்கவைக்கப்படுவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதல்கள் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் அமைதியாகத் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில், சிலர் அரசு வாகனத்தைத் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதால் காவல்துறையினர் மூவரைக் கைது செய்தனர்.
விடுதி செலவுகளைக் குறைக்க அரசு மேற்கொண்டுள்ள இந்தத் திட்டத்திற்கு அப்பகுதி மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் தங்களுடைய கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அந்த இடத்தில் கூடுதல் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளதோடு, அங்கு தங்கியிருப்பவர்களின் நடமாட்டமும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.
அமைதியான முறையில் போராட மக்களுக்கு உரிமை உண்டு என்றாலும், சட்டவிரோதச் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று காவல் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இச்சம்பவம் அந்தப் பகுதியில் நிலவும் சமூகப் பதற்றத்தையும் அரசின் குடியேற்றக் கொள்கை மீதான விமர்சனங்களையும் அதிகரித்துள்ளது.













