உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சீன அரசாங்கத்தின் உதவியை நாட பிரான்ஸ் தீர்மானித்துள்ளது.
எனவே அதற்கான பேச்சுவார்தையை மேற்கொள்ள ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்லவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
ஒரு ஆண்டு கால மோதலை முடிவுக்குக் கொண்டுவர போர்நிறுத்தம் மற்றும் அரசியல் தீர்வுக்கு அழைப்பு விடுத்து சீனா அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகளில் சீனா ஈடுபடுவது ஒரு நல்ல விடயம் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டு, துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டு, உக்ரைன் மற்றும் அதன் மக்களின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கப்பட்டால் மட்டுமே சமாதானம் சாத்தியம் என்றும் கூறியுள்ளார்.
ஆகவே ரஷ்யாவின் மீது அழுத்தம் கொடுக்க இரசாயன அல்லது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் சீனா தமக்கு உதவ வேண்டும் என்றும் இம்மானுவேல் மக்ரோன் கேட்டுக்கொண்டுள்ளார்.