கிளிநொச்சியில் பெரியம்மை நோய் தாக்கம் காரணமாக கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கிளிநொச்சி பிரதேச செயலாளர் பிரிவு கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள கால்நடைகளிற்கே இந்த நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பெரியம்மை நோய் தாக்கத்தால், கால்நடைகளின் வாய்பகுதியில் கொப்பலங்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக மேச்சலுக்குச் செல்ல முடியாத நிலையில் அவதிப்படுவதாகவும், கால்நடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது, ஏற்பட்டுள்ள பெரியம்மை நோய் தாக்கத்திற்கான மருந்து வகைகள் இல்லாத காரணத்தினால், அதற்கான தடுப்பூசியையாவது செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கால்நடை உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்