கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று வெப்பநிலை கணிசமான அளவு அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் விளைவாக, அதிக நேரம் வெளியில் இருப்பதும், அதிக நேரம் செயல்களில் ஈடுபடுவதும் நீரிழப்பு மற்றும் தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, அதிக தண்ணீர் அருந்தவும், முடிந்தவரை நிழற்குடையில் ஓய்வெடுக்கவும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
மேலும், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை வீடுகளிலேயே கவனித்துக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.