கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றானை மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
குறித்த பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது குறித்த காற்றாலை அமைப்பது தொடர்பில் மக்களின் எதிர்பார்ப்புக்கள், மற்றும் நன்மை தீமைகள் தொடர்பில் அவர் கேட்டறிந்து கொண்டார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் குறித்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு அனுமதி கோரப்பட்டது.
குறித்த அனுமதிக்கு முன்னர் அவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து நன்மை தீமைகள் பற்றி அறநித் பின்னரே அனுமதி வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் குறித்த பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் பிரதேச மக்களிடம் கலந்துரையாடி விடயங்களை பெற்றுக்கொண்டதாக ஊடகங்களிற்கு தெரிவித்தார்.
இதேவேளை், குறித்த காற்றாலை அமைப்பதனால் தமது மீன்பிடி தொழில் பாதிக்கப்புடும் எனவு்ம, அதனை தாம் எதிர்ப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.