ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற்றால் தமது அணி விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிரவ்ரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.
ஆனால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் முறுகல் நிலை இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிடுவதிலும் காலதாமதம் ஏற்படடுள்ளது.
குறிப்பாக ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு முன் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆசியக் கிண்ணத்தில் இந்தியா பங்பேற்காது என இந்திய கிரிக்கட் சபை அறிவித்தது.இதனை அடுதது இந்த ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடரும் நடைபெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அது மாத்திரமின்றி, ஆசியக் கிண்ணதை கலப்பு வடிவத்தில் நடத்துவதற்கான பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனையும் நிராகரிக்கப்பட்டதை அடுதது, இம்முறை ஆசியக் கிண்ணத்திலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.