அவுஸ்திரேலியா அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் டர்பன் கெபெர்ஹா மற்றும் கேப் டவுன் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
2018-ல் கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது நடந்த ‘பந்து சேதப்படுத்தும்’ (Ball-tampering scandal) சர்ச்சை உலக கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலியா அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.
2018-ம் ஆண்டு நடந்த டெஸ்டில் balltampering-ல் ஈடுபட்டதாக வோர்னர் ஸ்டீவ் ஸ்மித் பென்கிராஃப்ட் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த சர்ச்சையில் சிக்கிய ஸ்டீவ் ஸ்மித் பேட் கம்மின்ஸ் மிட்செல் ஸ்டார்க் நதன் லயன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் மீண்டும் அதே மைதானத்திற்கு டெஸ்ட போட்டிக்காகத் திரும்ப உள்ளனர். டேவிட் வோர்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர்.
















