2035 மகளிர் உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து, வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என்று ஃபிஃபா (Fifa) உறுதிப்படுத்தியுள்ளது.
1966 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடவர் உலகக் கிண்ணத்துக்குப் பிறகு, ஐக்கிய இராச்சியத்தில் கால்பந்து உலகக் கிண்ணம் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த நான்கு நாடுகள் மட்டுமே இப்போட்டித் தொடருக்கான ஏலதாரர்களாக இருந்தன.
ஃபிஃபாவின் சூரிச் தலைமையகத்திலிருந்து திங்களன்று (23) காணொளி வாயிலாக நடத்தப்பட்ட பிரத்யேகக் கூட்டத்தில், அவை இணைந்து நடத்துபவர்களாக அங்கீகரிக்கப்பட்டன.
இந்த லட்சியம் கால்பந்துக்கு அப்பாலும் நீண்டுள்ளது.
இந்தத் தொடர், கடந்த பத்தாண்டுகால வளர்ச்சியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதுடன், ஐக்கிய இராச்சியத்தில் பெண்கள் விளையாட்டிற்கு இதுவரை கிடைத்திராத மிகப்பெரிய தளத்தை வழங்கும்.
மேலும், விளையாட்டுத் துறையிலும் ஒட்டுமொத்த சமூகத்திலும் பாலின சமத்துவத்தை மேம்படுத்த உதவும்.
இந்தத் தொடரில் 48 அணிகள் பங்கேற்று, 39 நாட்களில் 104 போட்டிகளில் விளையாடும்.
இதற்கான விண்ணப்பத்தில், இங்கிலாந்தில் 16, வேல்ஸில் 3, ஸ்காட்லாந்தில் 2 மற்றும் வட அயர்லாந்தில் 1 என மொத்தம் 22 மைதானங்கள், 16 நகரங்களில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் 2035-ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் நடைபெறும்.
போட்டிகள் நடைபெறும் நகரங்கள், மைதானங்கள் மற்றும் பயிற்சிக்கான இடங்கள் குறித்த இறுதி முடிவை ஃபிஃபா (FIFA) உரிய காலத்தில் அறிவிக்கும்.
இந்தத் தொடருக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு இரண்டு மணிநேரப் பயணத் தொலைவிற்குள் 63 மில்லியன் மக்கள் வசிப்பதால், இதுவே இதுவரை மிக எளிதில் சென்றடையக்கூடிய தொடராக அமையும்.
சுமார் 4.5 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையாகும் என்றும், உலகம் முழுவதும் 3.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சியில் இதைக் காண்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடர் உள்ளூர் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை வெகுவாகக் கவரும் என்பதில் ஐயமில்லை.















