• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வரி வலையமைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்!

வரி வலையமைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/24
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் கணிசமான வருமானம் ஈட்டுவோர் பலர் இன்னும் வரி வலையமைப்பிற்குள் உள்வாங்கப்படவில்லை என ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.

வரி செலுத்த வேண்டிய போதிலும், அதிலிருந்து விலகியிருப்பவர்களை அடையாளம் காண்பதற்கான பொறிமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னணி சிங்கள ஊடகச் சேவை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அந்த செவ்வியில் அவர், நாட்டின் வரி அடித்தளத்தை விரிவுபடுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

எனினும், இந்நடவடிக்கைகள் ஊடாக அரசாங்கத்திற்கு மேலதிகமாக எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதைத் துல்லியமாக மதிப்பிடுவது கடினம் என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பளம், வங்கி வட்டி மற்றும் பங்காதாய வருமானம் ஆகியவற்றின் மீதான வரிகளை அறவிடுவது ஒப்பீட்டளவில் இலகுவானது எனக் குறிப்பிட்ட அவர், முதலாளிகள், வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் ஏற்கனவே வரிகளைப் பிடித்தம் செய்து, அது தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வழங்கும் கட்டமைப்புகளைக் கொண்டிருப்பதாக விளக்கினார்.

எனினும், சில தொழில்சார் நிபுணர்கள், சிறு வணிக உரிமையாளர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் ஊடாக வருமானம் ஈட்டுவோர் தொடர்பான தகவல்களைக் கண்டறிவது வரி அதிகாரிகளுக்குச் சவாலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள சுய மதிப்பீட்டு வரி முறையின் கீழ், சில தொழில்சார் நிபுணர்கள் தங்களது உண்மையான வருமானத்தை விடக் குறைந்த வருமானத்தை அறிவித்து, குறைந்தளவிலான வரியைச் செலுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அனைத்து தொழில்சார் நிபுணர்களும் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகக் கூறுவது நியாயமற்றது எனத் தெரிவித்த அவர், எனினும், ஒரு தரப்பினர் செலுத்த வேண்டிய வரியை விடக் குறைவான தொகையையே செலுத்தி வருவதாகவும் ஏற்றுக்கொண்டார்.

மேலும், கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் இன்னும் வரி வலையமைப்பிற்கு வெளியே இருக்கின்றனரா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், தற்போதுள்ள பொறிமுறைகளின் ஊடாக முழுமையாகக் கண்காணிக்கப்படாத வருமானங்களைக் கொண்ட கணிசமான தரப்பினர் நாட்டில் இருப்பதாகத் தாம் நம்புவதாகத் தெரிவித்தார்.

வாகனக் கொள்வனவு, காணி பரிமாற்றம், சொத்துக் கொள்வனவு மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் போன்றவற்றின் ஊடாக அறிவிக்கப்படாத வருமானங்களைக் கண்டறிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், அரச நிறுவனங்களிடையே காணப்படும் தகவல் கட்டமைப்புகளை ஒன்றிணைத்து, ஒருங்கிணைந்த கண்காணிப்பு முறைமையொன்றை உருவாக்குவதற்கான முழுமையான கட்டமைப்பு தற்போது இலங்கையில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம், வங்கிகள் மற்றும் காணிப் பதிவுத் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் தரவுத்தளங்களை ஒன்றிணைப்பதன் மூலம், இதுவரை அறிவிக்கப்படாத வருமானங்களை அடையாளம் காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பின் ஊடாக, தனிநபர்கள் அறிவித்துள்ள வருமானத்தையும் அவர்களின் நிதிப் பரிவர்த்தனைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, வரி வலையமைப்பிற்குள் உள்வாங்கப்பட வேண்டியவர்களை அடையாளம் காண முடியும் என்றும் அவர் விளக்கினார்.

இதேவேளை, வரி இணக்கப்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் மொத்த வரி வருமானத்தை எந்தளவிற்கு அதிகரிக்க முடியும் என்பதைத் துல்லியமாகக் கணிப்பது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, தற்போதைய முறைமைகளில் பதிவாகாத தொழில்சார் மற்றும் வணிக வருமானங்கள் தொடர்பான போதிய தகவல்கள் இல்லாத நிலையில், அவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய வரி வருமானத்தை மதிப்பிடுவது சவாலானது எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, அரச நிறுவனங்களுக்கு இடையில் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய விரிவான டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவது, வரி இணக்கப்பாட்டை மேம்படுத்துவதற்கும், வரி அடித்தளத்தை விரிவுபடுத்துவதற்கும், அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் முக்கியமான நடவடிக்கையாக அமையும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மேலும் வலியுறுத்தியுள்ளார்.

 

Related

Tags: Duminda Hulangamuwaதுமிந்த ஹுலங்கமுவவரி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்று பிறந்த நாள் காணும் ஜனாதிபதி அநுர!

Related Posts

இன்று பிறந்த நாள் காணும் ஜனாதிபதி அநுர!
இலங்கை

இன்று பிறந்த நாள் காணும் ஜனாதிபதி அநுர!

2026-11-24
பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

2026-11-24
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்
இலங்கை

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்

2026-11-23
இடைக்காலக் கொடுப்பனவைக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க
இலங்கை

இடைக்காலக் கொடுப்பனவைக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

2026-11-23
தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு
இலங்கை

தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு

2026-11-23
ரூ.65,000 சம்பளத்தில் வாழ்க்கை நடத்த முடியவில்லை – அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவலை!
இலங்கை

ரூ.65,000 சம்பளத்தில் வாழ்க்கை நடத்த முடியவில்லை – அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவலை!

2026-11-23

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
வரி வலையமைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்!

வரி வலையமைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்!

0
இன்று பிறந்த நாள் காணும் ஜனாதிபதி அநுர!

இன்று பிறந்த நாள் காணும் ஜனாதிபதி அநுர!

0
பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

0
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்

0
இடைக்காலக் கொடுப்பனவைக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

இடைக்காலக் கொடுப்பனவைக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

0
வரி வலையமைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்!

வரி வலையமைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்!

2026-11-24
இன்று பிறந்த நாள் காணும் ஜனாதிபதி அநுர!

இன்று பிறந்த நாள் காணும் ஜனாதிபதி அநுர!

2026-11-24
பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

2026-11-24
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்

2026-11-23
இடைக்காலக் கொடுப்பனவைக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

இடைக்காலக் கொடுப்பனவைக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

2026-11-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: