இலங்கைக்கு உரிய சுங்க வரிகளைச் செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜீப் வாகனமொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கடந்த நவம்பர் 19 ஆம் திகதி குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபர் மற்றும் குறித்த வாகனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், நேற்று (23) பண்டாரவளை பகுதியில் வைத்து குறித்த ஜீப் வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
















