மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். அலுவல கத்தில் விவாதங்களை தவிர்த்து விடவும். மேலதிகாரிகள் ஆதரிப்பர். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர்.
ரிஷபம்: சந்திரன் தொடர்வதால் முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். மூத்தோரின் சொல்பேச்சை கேட்டு செயல்படவும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நன்மை தரும்.
மிதுனம்: உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. பேச்சில் தெளிவு பிறக்கும். பிள்ளைகள் சொல்பேச்சு கேட்பார்கள். தாயாரின் உடல் நலம் நிம்மதி தரும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கடகம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. யாருக்கும் எந்த வகையிலும் உறுதி மொழி தராதீர்கள். தொழிலில் போட்டிகள் விலகும். பங்குதாரர் ஆதரவு தருவார். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
சிம்மம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் தீர்வு கிட்டும். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
கன்னி: இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
விருச்சிகம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவரு வீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். பயணங்கள் சிறப்பாக அமையும். அலுவலகத்தில் ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும். மேலதிகாரி பாராட்டுவார். வியாபார போட்டி குறையும்.
மகரம்: திட்டமிட்ட வேலைகளை தடைபட்டு முடிக்க வேண்டி வரும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி அளிக்காதீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.
கும்பம்: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்களை அனுசரித்து செல்லவும். நண்பர்களின் உதவியுடன் புது வேலை கிட்டும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரம் லாபம் தரும்.
















