ஆர்.மனோ
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நிலத்தடி ரயில் சாரதிகள் இன்று நண்பகல் 12 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
நான்கு நாள் வேலை வாரம் தொடர்பாகத் தொழிற்சங்கத்துக்கும் ரயில் நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நகரின் பல்வேறு பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்துச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேலைக்குச் செல்வோர், மாணவர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான பயணிகள் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ள நேரிடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் பயணிகளுக்கு மாற்றுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துமாறு லண்டன் போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.














