கோடிக்கணக்கான பயனர்களின் இதயத்தை ஆளும் வாட்ஸ்அப், மற்றொரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம், இப்போது வாட்ஸ்அப் பயனர்கள் வீடியோ அழைப்புகளின் போது தங்கள் திரையைப் பகிரலாம், அதாவது ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்.
ஸ்கிரீன் ஷேரிங் செய்யும் போது பயனரின் திரையில் என்ன நடந்தாலும் அது வீடியோ கால் ரிசீவருக்கு தெரியும். இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இப்போது வாட்ஸ்அப்பை அலுவலக கூட்டங்களுக்கும் பயன்படுத்தலாம்.
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இந்த புதிய அம்சத்தை பற்றி தனது பேஸ்புக் கணக்கில் அறிவித்துள்ளார். வாட்ஸ்அப்பில் வீடியோ அழைப்புகளில் ஸ்கிரீன் ஷேர் அம்சத்தைச் சேர்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாட்ஸ்அப்பின் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பிரபலமான வீடியோ அழைப்பு செயலியான கூகுள் மீட் மற்றும் ஜூம் ஆகியவை கடும் போட்டியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.