ஸ்பெயின் பெண்கள் அணியில் பெரும்பாலானோர் தங்கள் புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொண்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற கூட்டங்களுக்குப் பிறகு இன்று புதன்கிழமை இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
இந்த மாத நெஷன்ஸ் லீக் போட்டிகளுக்கு அழைக்கப்பட்ட 23 வீரர்களில் இருவர் அணியில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளனர்.
ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு உடனடி மற்றும் ஆழமான மாற்றங்களுக்கு உறுதியளித்துள்ளதாக விளையாட்டுத்துறை செயலாளர் விக்டர் பிராங்கோஸ் கூறியுள்ளார்.
இதனை அடுத்து ஸ்பெயின் பெண்கள் அணியில் பெரும்பாலானோர் தங்கள் புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் பெண்களுக்கான உலகக்கிண்ண தொடரை வென்றதைத் தொடர்ந்து, ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ், ஜென்னி ஹெர்மோசோவை முத்தமிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனை கண்டித்துள்ள ஸ்பெயின் வீராங்கனைகள் கூட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படும் வரை ஸ்பெயினைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட போவதில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.