இந்திய மக்களின் உதவியோடு தேசிய அளவில் இலவசமாக இடம்பெறும் அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை தொடர்பான பயிற்சிகள் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டுள்ளன.
அதன்படி களனி பல்கலைக்கழகத்தில் இச்சேவை வழங்குனர்களுக்கான டிப்ளோமோ கற்கை ஒன்றும் நடத்தப்பட்டு வருகின்றது.
தற்போது பேக்கிங்காம்ஷியர் நியூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆறு பரா மெடிக்கல் உறுப்பினர்களால் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒக்டோபர் மாத இறுதியில் பேராசிரியர் வில் ப்ரோட்டன் தலைமையிலான குழுவினர் கொழும்பு, தம்புள்ள, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று இடங்களில் பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.
இந்த பயிற்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் இடம்பெற்றதோடு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 65 நோயாளர் காவு வண்டி அலுவலர்கள் இப்பயிற்சியை பெற்றுக் கொண்டனர்.
இப்பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததோடு எதிர்வரும் காலத்தில் அவசர மருத்துவ கவனிப்புக்கு தேவையான தொழில்சார் அறிவை அது மேலும் விருத்தி செய்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
தொலைபேசி இலக்கம் 1990 இலவச நோயாளர் காவு வண்டிச் சேவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இருந்த போதிலும், அது இலவசமாகக் கிடைக்கும் சேவை எனற புரிந்துணர்வு மக்கள் மத்தியில் இல்லை.
இந்த நோயாளர் காவு வண்டிக் குழுவினர் பொதுவான மருத்துவ அவசர நிலைமைகளின் போதும், விபத்துகளில் கடுமையாகக் காயப்பட்டவர்களுக்கும், உதவக்கூடிய பயிற்சிகளைப் பெற்றிருக்கிறார்கள்.