இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
இரண்டு விசேட அறிக்கைகள் மற்றும் முந்தைய கோப் குழுவின் பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தலைமையிலான கோப் குழு முன்னிலையில் இலங்கை கிரிக்கெட் அழைக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக இன்றைய கலந்துரையாடலுக்கு கணக்காய்வாளர் நாயகம் முன்வைக்கவுள்ள அறிக்கையில், முன்னதாக கிரிக்கட் சபைக்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் உள்ளடக்கப்படலாம் என கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.