சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) சுமையை குறைக்கும் நோக்கில், பரேட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடனைத் திருப்பிச் செலுத்தாத கடன் வாங்குபவர்களிடமிருந்து நிலத்தையும் சொத்துக்களையும் கைப்பற்ற பாரேட் சட்டம் அனுமதிக்கிறது.
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சுமையை குறைக்கவும் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எளிதாக்கும் வகையிலும் இந்த பரேட் சட்டம் டிசம்பர் 15 ஆம் திகதிவரை தற்காலிக இடைநிறுத்தப்படவுள்ளது.
இதனை இடைநிறுத்தம் செய்வது தொடர்பான திருத்தங்களை நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.