மார்ச் 22 முதல் மே 26 வரை நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மொஹமட் ஷமி விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வலது குதிகாலில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக அவர் ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை அவர் இழந்துள்ளார்.
ஒருநாள் உலகக் கிண்ண தொடருக்கு பின்னர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி மொஹமட் ஷமி எந்த கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை.
இந்நிலையில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அவரது இந்த காயம் பெரும் அடியாக இருக்கும் என கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் ஐ.பி.எல். முடிந்து 5 நாட்களுக்குப் பின்னர் தொடங்கும் கரீபியன் மற்றும் அமெரிக்காவில் தொடங்கும் T20 உலகக் கிண்ண போட்டியில் அவர் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.