தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.
அதன்படி, இன்றும் எதிர்வரும் 6 ஆம் திகதியும் இந்த தெளிவூட்டும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சு.ஆ.யு.டு ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்திற்கமைய தேர்தலுக்காக செலவிடப்படும் நிதி மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், இதுவரை எந்தவொரு தேர்தலும் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக இந்த சட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பாக அரசியல்வாதிகளுக்கு உரிய தெளிவுபடுத்தலை வழங்கும் நோக்கில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.