• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
50 கோடி ரூபா போதைப்பொருள் மீட்பு: முன்னாள் இராணுவ அதிகாரி உட்பட நால்வர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/28
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

அஹுங்கல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (27) மாலை பலப்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அம்பலாங்கொடை பகுதியில் உள்ள வீடொன்றைச் சோதனையிட்டபோது, அங்கிருந்த பெண்ணொருவரிடமிருந்து 6 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 7 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

அப்பெண்ணிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரகத்தைச் சேர்ந்த 30 தோட்டாக்களும், 3.8 ரகத்தைச் சேர்ந்த 30 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த பெண்ணிடமிருந்து அந்தப் போதைப்பொருட்களை எடுத்துச் செல்ல வந்த மற்றொரு நபரிடமிருந்து தலா 6 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களைக் கைப்பற்ற பொலிஸாரால் முடிந்தது.

இந்தக் கடத்தல் கும்பலில் கைதான நால்வரில் ஒருவர் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி என தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், இந்த முழு நடவடிக்கையும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் வழிநடத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சுற்றிவளைப்புடன் சேர்த்து, இவ்வருடத்தில் மட்டும் தென் மாகாணத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு 100 கிலோகிராமைக் கடந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த வருடம் (2025) இதே மாகாணத்தில் 1,705 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களும், 432 சட்டவிரோத ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.

கடல் மார்க்கமாக நாட்டிற்குள் போதைப்பொருள் ஊடுருவுவதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருப்பின் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related

Tags: arrestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குடிநீர் பிரச்சினை மோதலாக மாறியது: ஒருவர் உயிரிழப்பு

Next Post

போதைப்பொருள் அடிமை-7,950 பேர் கைது

Related Posts

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!
இலங்கை

2026-08-28
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க உருவாகிறது புதிய அதிகாரசபை!

பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தீர்வு காண அமைச்சர் நேரில் ஆய்வு

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் – எம்.எம். பாஸில்

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி
அம்பாறை

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

2026-08-28
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமை தொடர்பான மனு விசாரணை நிறைவு!
இலங்கை

22-வது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக மனுத் தாக்கல்!

2026-08-28
Next Post
போதைப்பொருள் அடிமை-7,950 பேர் கைது

போதைப்பொருள் அடிமை-7,950 பேர் கைது

வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தி பேரணி!

ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

0
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க உருவாகிறது புதிய அதிகாரசபை!

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க உருவாகிறது புதிய அதிகாரசபை!

0
பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தீர்வு காண அமைச்சர் நேரில் ஆய்வு

பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தீர்வு காண அமைச்சர் நேரில் ஆய்வு

0
ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் – எம்.எம். பாஸில்

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் – எம்.எம். பாஸில்

0
விஜயின் செல்வாக்கு உயர்கிறது; பிரதமர் பதவிக்கான விருப்பத்தில் முன்னேற்றம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.