ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்ற நாடாக டுபாய் விளங்குகிறது. நாள் தோறும் பல்லாயிரம் கணக்கான மக்கள் துபாயை சுற்றி பார்ப்பதற்காக மட்டும் வேறு நாடுகளிலிருந்து வருகிறார்கள்.
மேலும் மக்களை கவரும் வகையில் உலகின் மிக உயரமான கோபுரம், ஆடம்பரமான உணவகங்கள் மற்றும் தங்குவதற்கான ஹோட்டல்கள் என அட்டகாசமான இடங்களும் தடுபாயில் இருக்கின்றன.
அந்த வகையில் சுற்றுலா தளங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய திட்டத்தை டுபாய் முன்னெடுத்துள்ளது. பொதுமக்களுக்காக 6.6 கிலோ மீட்டர் தூரம் கடற்கரையை உருவாக்க உள்ளது. அதில் நீச்சல் அடித்து கொண்டே டுபாயின் அழகை ரசிக்க 2 கி.மீ வரை நீச்சல் குளமும் அமைக்கப்படவுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களான தீம் பார்க்குகள் பல பொழுதுபோக்கு மண்டலங்கள் 330 ஹெக்டேர் பரப்பளவில் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.