கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்றம், மருத்துவ சங்கங்கள் போன்றன கோரிக்கை விடுத்தும் கொல்கத்தா மாணவர் சங்கம் போராட்டத்தை கைவிடவில்லை.
உயிரிழந்த வைத்தியருக்கு நீதி கிடைக்கும் வரையில் போராட்டம் நீடிக்கும் என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் மேற்குவங்க மாணவர்கள் சங்கம் மாபெரும் பேரணியை முன்னெடுத்துள்ளது.
இதனால் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4,000 இக்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இப் பேரணி நேற்று நபன்னா பகுதியை அடைவதால் அவ்விடத்தில் 2,100 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியை அடைந்த மாணவர்கள் பொலிஸாரால் போடப்பட்டிருந்த தடுப்புக்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைக்க பொலிஸார் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசியுள்ளனர்.
பொலிஸ் மற்றும் மாணவர்கள் என இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் தொடர்வதால் அங்கே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.