எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று காலை காலை 8:00 மணி முதல் மாலை 6.00 வரை அந்த பணிகளை மேற்கொள்ள தபால் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் கடந்த 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், இதுவரை தபால் திணைக்களத்தினால் சுமார் 30 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை எனினும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க, குறிப்பிட்டுள்ளார். எனவே, வாக்காளர்கள் இன்று வீட்டிலேயே இருந்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை கையொப்பத்துடன் பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.