பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி ரயில் பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கடவை மூடப்படும் என ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு புகையிரத திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.













