ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலைமையினையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இரவு வேளைகளிலும் எரிபொருளுக்கு மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதை காணமுடிகின்றது.
நேற்றையதினம் எரிபொருளுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களை நோக்கி படையெடுக்கும் நிலைமையினை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு நகரில் உள்ள மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பதை காணமுடிகின்றது.
நேற்று இரவும் எரிபொருள் வழங்கும் வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கிவருவதையும் காணமுடிகின்றது.
எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலும் பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களுக்கு படையெடுக்கும் நிலைமையினையே காணமுடிகின்றது.














