பாரசீக வளைகுடாவில் டேங்கர் கப்பல் தாக்குதல்கள் தொடர்ந்தபோதிலும், செயற்கை நுண்ணறிவால் (AI) பாதிக்கப்பட்ட பொருட்களின் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் குறித்த சந்தேகங்களால் தூண்டப்பட்ட பங்கு விற்பனையானது திங்களன்று (23) மசகு எண்ணெய் விலைகளையும் சரிவடையச் செய்தது.
அதன்படி, திங்கள் ஆரம்ப வர்த்தகத்தில் பிரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 92.55 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 83.45 டொலராகவும் வர்த்தகமாகின.
தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட நிகழ்வுகளால் இந்த விற்பனை சரிவு தூண்டப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான பில்லியன் டொலர் கடன் நிதிகளால் வளர்ச்சி பெற்றுவரும் செயற்கை நுண்ணறிவுத் துறையின் எதிர்காலம் குறித்து முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்பியதே இதற்குக் காரணம் என ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.















