கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் சிரா பகுதியில் அமைந்துள்ள நெஞ்சாலையில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரழந்துள்ளனர்.
அதேநேரம் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெடுஞ்சாலையின் வீதிப் பிரிப்பு நடுச்சுவருடன் மோதுண்டே குறித்த பஸ் இன்று (02) அதிகாலை 04.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணையை கல்லம்பெல்லா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.