டின் மீன் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை (VAT) குறைக்குமாறு இலங்கை டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் (CFMASL) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
டின் மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது பிரச்சினை இல்லையென்றாலும், அவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள வட் வரியை குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென CFMASL தலைவர் ஷிரான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வட் வரி குறைக்கப்படாவிட்டால் அதன் விளைவை மீனவர்கள் அனுபவிக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணக்கம் காணப்பட்டதன் பின்னரே டின் மீன்களுக்கான கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.