அமெரிக்க கிரிக்கெட்டின் உறுப்பினர் பதவியை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தி வைத்துள்ளது.
செவ்வாயன்று (22) ஒரு மெய்நிகர் கூட்டத்திற்குப் பின்னர் ஐ.சி.சி.யால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் கீழ் ஒரு ஐ.சி.சி உறுப்பினராக அதன் கடமைகளை தொடர்ச்சியாக மீறியதற்காக அமெரிக்க கிரிக்கெட்டுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆயத்தங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் அமெரிக்க அணி பங்கேற்பதை இது தடுக்காது.
மேலும், இவர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ஆடவர் 2026 டி20 உலகக் கிண்ணத்திலும் பங்கெடுப்பார்கள்.
அமெரிக்க தேசிய அணிகளின் மேலாண்மை மற்றும் நிர்வாகம் தற்காலிகமாக ஐசிசியால் மேற்பார்வையிடப்படும்.
ஐசிசி பட்டியலிட்ட அரசியலமைப்பு மீறல்களில் செயல்பாட்டு நிர்வாக கட்டமைப்பை செயல்படுத்தத் தவறியது மற்றும் அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் கமிட்டியுடன் தேசிய நிர்வாகக் குழு அந்தஸ்தை அடைவதில் முன்னேற்றம் இல்லாதது ஆகியவை அடங்கும்.
ஜூலை மாதம் ஐ.சி.சி அதன் வருடாந்திர பொதுக் கூட்டத்தில், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை” நடத்தவும் “விரிவான” நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அமெரிக்க கிரிக்கெட் நிர்வாகத்துக்கு மூன்று மாதங்கள் அனுமதி அளித்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இந்த இடைநீக்கம் வந்துள்ளது.
1965 முதல் அமெரிக்கா ஐ.சி.சி.யின் இணை உறுப்பினராக இருந்து வருகிறது.
மேலும் 2024 ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் இடம்பெற்றது.
இந்த நிலையில், இந்த இடைநீக்கம் அமெரிக்காவில் விளையாட்டுக்கு ஏற்பட்ட சமீபத்திய பின்னடைவாகும்.














