கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது.
இன்று காலை அவர் வாக்குமூலம் அளிக்க கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.
அண்மையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது வந்த நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.















