கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 7/ G ரெயின்போ காலனி திரைப்படத்தின் பக்கம் இரண்டு எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
செல்வராகவன் எழுதி இயக்கும் இந்திய இருமொழி காதல் திரைப்படமாக உருவாகியுள்ள 7/G ரெயின்போ காலனி 2 திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸின் கீழ் ஏ.எம். ரத்னம் தயாரிக்கிறார் .
இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் தெலுங்கு மொழி பதிப்பிற்கு 7G பிருந்தாவன் காலனி 2 என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியான 7G ரெயின்போ காலனி படத்தின் தொடர்ச்சியாக , ரவி கிருஷ்ணா , சுமன் செட்டி மற்றும் சுதா ஆகியோர் மீண்டும் தங்கள் வேடங்களில் நடிக்கின்றனர்.
இதேவேளை, இந்த திரைப்படத்தில் அனஸ்வரா ராஜன் புதிய நாயகியாகவும், ஜெயராம் ஒரு முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர்.
படத்தின் முதன்மை படப்பிடிப்பு கடந்த ஒகஸ்ட் 2023 இல் தொடங்கிய நிலையில் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த ஆண்டு ஜனவரி வெளியிடப்பட்டது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளதுடன் ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.


















