இங்கிலாந்தில் அண்மைக்காலமாக சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்படும் சம்பவங்கள் குறித்து சிறைச்சாலை தலைமை ஆய்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறைச்சாலைகளில் காணப்படக்கூடிய நெரிசல்கள், அடுத்தடுத்த அரசாங்கங்களினால் உருவாக்கப்படும் நெகிழ்வான தண்டனை விதிகள் என்பனவே இவ்வாறு கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்து தவறுதலாக விடுவிக்கப்படுவதற்கு காரணம் என சிறைச்சாலை தலைமை ஆய்வாளர் சார்லி டெய்லர் குற்றம் சாட்டுகிறார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு தவறாக விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர், எனவும் இந்த ஆண்டு ஜூன் மாதம் தவறுதலாக விடுவிக்கப்பட்டதாக நம்பப்படும் இரண்டு கைதிகளும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக சார்லி டெய்லரின் மதிப்பீடு கூறுகிறது.
மேலும், தவறாக முன்கூட்டியே விடுவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகவும் சங்கடகரமானதும் ஆபத்தானதும் என்றும் சார்லி டெய்லர் கூறியுள்ளார்.
இது “மிகவும் சிக்கலான தண்டனை கட்டமைப்பு ” எனவும் விவரித்துள்ளார்.
சிறைச்சாலை ஆய்வுகள் “சிறைச்சாலைகளைப் பாதுகாப்பாகவும், ஒழுக்கமாகவும் வைத்திருப்பதிலும், கைதிகள் விடுதலையின் போது வேலை பெற உதவும் வகையான செயல்பாட்டை வழங்குவதிலும் தோல்வியை மீண்டும் எடுத்துக்காட்டுவதக்கவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறைச்சாலை அமைப்பில் ஏற்பட்ட நெருக்கடிக்கு அடுத்தடுத்த அரசாங்கங்கள் அளித்த பதில்களையும் அவர் சுட்டிக்காட்டியதுடன் அந்த பதில்கள் , “தவறுகள் நிகழும் வாய்ப்பை அதிகரிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மூன்று ஆண்டுகளில் பிழையில் விடுவிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 50 லிருந்து 262 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.



















