ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் ஜப்பானின் பொருளாதாரம் ஆண்டுக்கு 1.8 சதவீதமாக சரிந்ததாக திங்களன்று (17) அந் நாட்டு அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகள் நாட்டின் ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளன.
காலாண்டுக்கு காலாண்டு அடிப்படையில், ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆறு காலாண்டுகளில் முதல் சுருக்கத்தில் 0.4 சதவீதம் சரிந்ததாக ஜப்பானின் அமைச்சரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஒட்டுமொத்த சுருக்கம் எதிர்பார்த்த அளவுக்குக் கடுமையாக இல்லாததால் இது மந்தநிலையின் தொடக்கத்தை விட தற்காலிக பின்னடைவைக் குறிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்கா செப்டம்பரில் ஜப்பானுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை முறைப்படுத்தியது, கிட்டத்தட்ட அனைத்து ஜப்பானிய இறக்குமதிகளுக்கும் அடிப்படை 15 சதவீத வரியை அமுல்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

















