இலங்கையின் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் நேற்று (04) மீண்டும் தொடங்கப்பட்டது.
முன்னதாக பாதகமான வானிலை காரணமாக, அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்தது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு புறச்சுற்றுவட்ட அதிவேக நெடுஞ்சாலை, கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளையும் பயன்படுத்தும் வாகனங்களுக்கு இந்த இலவச பயண வசதி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.












