மத்தியப் பிரதேசத்தின் தாரிலுள்ள சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா ஆலயம் – கமல் மௌலா மசூதி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (23) இந்துக்களும் முஸ்லிம்களும் பிரார்த்தனை செய்வதற்கு இந்திய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அந்த உத்தரவின்படி, வெள்ளிக்கிழமை வசந்த பஞ்சமி அன்று சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இந்துக்கள் பிரார்த்தனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதே நேரத்தில் முஸ்லிம்கள் அன்று மதியம் 1 மணி முதல் 3 மணி வரை தொழுகை நடத்த அனுமதி அளித்துள்ளது.
அதேநேரம், குறித்த தினத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எத்தனை பேர் தொழுகைக்கு வருகிறார்கள் என்பதை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சட்டம் ஒழுங்கு ஏற்பாடுகளைச் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டது.
வசந்த பஞ்சமி வெள்ளிக்கிழமை வரும்போது போஜ்சாலாவில் வழிபாடு மற்றும் பிரார்த்தனை தொடர்பாக இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே நீண்ட காலமாக ஒரு தகராறு இருந்து வருகிறது.
இதற்கு முன்னர் 2006, 2013 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இந்த நிகழ்வு தொடர்பாக இரு சமூகத்தினரிடையிலும் மோதல்கள் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
















