புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு இன்று (சனிக்கிழமை) காலை, இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று காலை 7.16 மணியளவில் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது ஆரம்ப நிகழ்வாக புத்த மந்திரயவில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர், பின்னர் தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வில் ஈடுபட்டார்.
இதன்போது மாதன்வல ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய வெல்லகிரிய சுமங்கள தேரர், பிரதமர் மஹிந்தவுக்கு தலையில் எண்ணெய் தேய்த்து ஆசீர்வதித்தார்.
குறித்த நிகழ்வில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் சிரிபால கம்லத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






