எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலலினால் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து மீன் பிடிக்க முடியாமல் நாளாந்தம் இன்னல்களை அனுபவிப்பதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை பொலிஸார் தாக்கிய காணொளிகள் வெளியாகியுள்ளன.
கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் மீன் பிடி நடவடிக்கை தடை செய்யப்பட்ட நிலையில் தமக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ள 5,000 ரூபாய் தமக்கு போதாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மீன்பிடி வலைகள் போன்ற சொத்துக்கள் இந்த நெருக்கடியால் அழிவடைந்துள்ள நிலையில் இதற்கு மட்டுமே 20,000 க்கு மேல் செலவாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.















